கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் எரிக்கப்படும் -திட்டவட்டமாக அறிவித்தது சுகாதார அமைச்சு

கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் பேசியபோது அவர் இத்தகவலை உறுதிபடத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கொரோனாவால் உயிரிழக்கும் உடல்களை புதைப்பதற்கான எந்த தீர்மானத்தையும் சுகாதார அமைச்சு எடுக்கவில்லை. அவ்வாறான உடல்களை எரிப்பதாக கடந்த மார்ச் மாதமே தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க அமைக்கப்பட்டுள்ள விசேட மருத்துவர்கள் அடங்கிய குழு தற்சமயம் கலந்துரையாடி வருகிறது.

அவ்வாறு ஏதாவது மாற்றுத் திட்டங்கள் இருந்தால் மக்களுக்கு அறிவிப்போம். அதுவரை உடல்கள் எரிக்கப்படுவதே அரசாங்கத்தின் செல்லுபடியான தீர்மானமாகும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply