விதிமுறைகளை மீறி மேர்வின் சில்வா ஏற்பாடு செய்த விருந்துபசார நிகழ்வில் அரசியல்வாதிகள் உட்பட பலர் –பொதுசுகாதார பரிசோதகர்கள் கண்டனம்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஏற்பாடு செய்த விருந்துபசார நிகழ்வு குறித்து பொதுசுகாதார பரிசோதகர்கள் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
கிறிஸ்மஸ் தினத்தன்று இந்த விருந்துபசாரநிகழ்வு இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர் என ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இதில் கலந்துகொண்டுள்ளார்.
மேர்வின் சில்வாவின் மகன் வெளியிட்டுள்ள வீடியோவில் இசைக்கலைஞர்கள் உட்பட பலர் காணப்படுகின்றனர்.

களியாட்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மது அருந்துவதையும் சிகரெட பயன்படுத்துவததையும் நடனமாடுவதையும் காணமுடிகின்றது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் இந்த களியாட்;நிகழ்வு கொரோனாவிதிமுறைகளை மீறியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
இந்த களியாட்ட நிகழ்வு குறித்து அறிந்திருக்கவில்லை எனவும் தகவல்களை பெற்றபின்னர் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply