பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

தமக்கு இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு 6718 இலங்கையர்கள் பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரசியல்வாதிகளினால் தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக தாங்கள் விண்ணப்பத்திருக்கும் புகலிடக் கோரிக்கையில் இவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டு காலப் பகுதியில் 6718 இலங்கையர்கள் இவ்வாறு புகலிட அந்தஸ்து கோரி பிரித்தானிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இவ்வாறு புகலிடம் கோரி விண்ணப்பம் செய்தவர்களில் 144 பேருக்கு இதுவரையில் அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசியல் புகலிடம் வழங்கப்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply