அடுத்த தேர்தலில் களமிறங்கவுள்ள சஜித்! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

அடுத்துவரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச பொதுவேட்பாளராக களமிறங்குவார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் நாட்டில் உள்ள மாற்று தலைவராக சஜித் பிரேமதாசவே கருதப்படுகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும்போது எதிர்க்கட்சிகள் சஜித் பிரேமதாசவை பொதுவேட்பாளராக அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் பாரிய எதிர்க்கட்சிக்கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்கான யாப்பும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்காக 10 பேர் முக்கியஸ்தர்களின் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டதுடன், இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் உள்ளடங்குகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாணசபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படக்கூடாது என்றும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததன் பின்னரே அது நடத்தப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply