எனது மருந்தினால் எவரும் பாதிக்கப்படவில்லை- கேகாலை வைத்தியர்

தனது உள்ளூர் மருந்தை உட்கொண்ட போதிலும் இருவர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்களுக்கு கேகாலை வைத்தியர் தம்மிக்க பண்டார நேற்று பதிலளித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், பாதிக்கப்பட்ட இரு நபர்களும் தனது பாணி மருந்துக்கு மேலதிகமாக கொவிட்-19க்கு மற்றொரு தீர்வான ‘ரிட்டிகல பாணி’யையும் உட்கொண்டதாகக் கூறியுள்ளார்.

இதனாலேயே அவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகினர் எனக் கூறியுள்ளார்.

மற்றைய பாணி காரணமாக தனது பாணியின் செயற்றிறன் நீர்த்துப் போனதாகவும் ஒரு கொவிட்-19 தொற்றாளரால் மருத்துவத்தின் மீதான நம்பிக்கையை இழக்க வேண்டாம் என தான் பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply