மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய 61 பேருக்கு கொரோனா

நாட்டில் தற்போது மேல் மாகாணத்திலிருந்து வெளி யேறும் 11 இடங்களில் எழுமாற்றாக அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அதன் படி மேல் மாகாணத்திலிருந்துவெளியேறும் 11 இடங்களில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

நேற்றைய தினம் 1,359 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் மேலும் 07 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி கடந்த 18 ஆம் திகதி முதல் இன்று காலை 06 மணி வரை மேற்கொண்ட பரிசோதனைகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 315 பேர் தனிமைப்படுத்தப்பட்டு ள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 05 ஆம் திகதி வரை அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply