இன்று முதல் 3 நாட்களுக்கு விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு – அஜித்ரோகண

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி செயற்படுபவர்களைக் கைது செய்ய இன்று முதல் நாளை மறு தினம் வரை விசேட பொலிஸ் சுற்றிவளைப்பை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரி வித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறிச் செயற் படுபவர்களைக் கைது செய்ய இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை விசேட பொலிஸ் சுற்றிவளைப் பை நாடு முழுவதும் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி இரவு நேரங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பொதுமக்கள் ஒன்று கூடுதல் மற்றும் கூட்டங்கள் நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை ஆராய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதுவருடப் பிறப்பிற்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ளன குறித்தகாலப்பகுதியில் பொதுமக்கள் தனிமைப் படுத்தல் சட்டங்களை மீறாமல் செயல்படுமாறும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் புதுவருடத்தைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply