இந்தியா சிங்கப்பூரிலிருந்து வரும் விமானங்களிற்கு தடைவிதிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை-சவேந்திரசில்வா

புதியவகை வீரியமிக்க வைரஸ்கள் குறித்து அச்சம் தீவிரமடைந்து வருகின்ற போதிலும் இந்தியாவிலிருந்த விமானங்கள் வருவதை இடைநிறுத்தும் திட்டமெதுவுமில்லை என இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவி;த்துள்ளார்.
இந்தியா சிங்கப்பூரில் புதியவகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தநாடுகளில் விமானங்கள் வருவதற்கு தடைவிதிக்கும் எண்ணமெதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்திலிருந்தே சிங்கப்பூரிற்கும் இந்தியாவிற்கும் இந்த வைரஸ்கள் சென்றுள்ளன என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா புதிய வைரஸ்கள் இந்த நாடுகளில் உருவாகவில்லை இந்த நாடுகளில் பலர் இந்த வைரசினால் பாதிக்கப்படவில்லை எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் குறைந்தளவு எண்ணிக்கையான விமானங்களே வருகின்றன சிங்கப்பூரிலிருந்தே அதிக விமானங்கள் வருகி;ன்றன என அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply