திட்டமிட்ட வகையில் பௌத்த பிக்குகளை களமிறக்கும் அரசாங்கம்! பகிரங்க குற்றச்சாட்டு

அரசாங்கம் திட்டமிட்டு பௌத்த பிக்குகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடச் செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் அரசாங்கமே திட்டமிட்டு செய்த ஆர்ப்பாட்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட பௌத்த பிக்குகள் உட்பட அனைவரும் அரசாங்கத்தை ஆதரிக்கும் அரசாங்கத்திற்கு நெருக்கமான நபர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகள் கொரோனா தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்யவும் தகனம் செய்யவும் அனுமதி வழங்கியுள்ளன. தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பலர் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதால் எந்த ஆபத்தும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கூட அரசாங்கம் மக்களின் சமய நம்பிக்கைகளுக்கு இடமளிக்காது தன்னிச்சையாக செயற்பட்டு வருகிறது.

இனவாதத்தை தூண்டி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் தனது இயலாமையை மறைத்துக்கொள்ள தொடர்ந்தும் இனவாதத்தை தூண்டி வருகிறது. இதற்கான தமக்கு ஆதரவான அணிகளை திட்டமிட்டு வீதியில் இறக்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டமும் அந்த திட்டத்தின் ஒரு பகுதி என்றார்.

Be the first to comment

Leave a Reply