எத்தனோல் – அல்ஹகோல் தயாரிக்க சோளத்தைப் பயன்படுத்தத் தடை

எத்தனோல் மற்றும் அல்ஹகோல் உற்பத்திக்கு மக்காச் சோளம் பயன்படுத்துவதைத் தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுமாறு கலால் ஆணையாளருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சோளம் அறுவடை செய்வதற்கான காலம் நெருங்கி வருவதால் அனைத்து விவசாயிகளும் தமது அறுவடைக்கு நியாயமான விலையைப் பெற வேண்டுமென ஜனாதிபதி நம்புவதாக ஜனாதிபதி செயலகம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

எனவே சோளத்தைப் பயன்படுத்தி எத்தனோல் மற்றும் அல்ஹகோல் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்குப் பதிலாக உள்நாட்டில் வளர்க்கப்படும் மஞ்சள், மக்காச்சோளம், பாசிப்பயறு, எள் மற்றும் குரக்கன் ஆகியவற்றுக்கு ஒரு பரந்த சந்தையை உருவாக்க வேண்டும் என்று அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

Be the first to comment

Leave a Reply