வெளிநாடுகளில் சிக்குண்ட 108 இலங்கையர்கள் தாயகம் வருகை

கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 108 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கட்டாரிலிருந்து 83 பேரும், அபுதாபியிலிருந்து 13 பேரும், மாலைத்தீவிலிருந்து 12 பேருமே இன்று வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வந்தடைந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளனர்.

இதேவேளை உக்ரைனிலிருந்து 160 பேரும், துருக்கியிலிலிருந்து 04 பேரும், இந்தோனேசியாவிலிருந்து 03 பேரும், டுபாயில் இருந்து 22 பேரும் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply