கொழும்பின் சில பகுதிகளில் இன்று காலை முதல் தனிமைப்படுத்தல் நீக்கம்

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகளில் இன்று முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என அரசாங்க தகவல் திணைக் களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் டேம்வீதி, வாழைத்தோட்டம் மற்றும் மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் இன்று காலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்ட பட்ட வேகந்த மற்றும் ஹூனுப்பிட்டிய கிராமசேகவர் பிரிவிற் குட்பட்ட பகுதிகள் இன்று 05 மணி முதல் தனிமைப்படுத் தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதை தவிர வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயூரா பிரதேசம், பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹவத்த, காளிபுள்ளவத்தை மற்றும் வெல்லப் பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சந்த செவன வீட்டு திட்டம் இன்று காலை 5 மணிமுதல் தனிமைப் படுத்தலி லிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 5 மணிமுதல் தனிமைப் படுத்தப் பட்ட பகுதிகள்

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட் பட்ட புதுக்கடை மேற்கு மற்றும் புதுக்கடை கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணிமுதல் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவுக் குட்பட்ட மின்னன, விலேகொட, யகுடாகொட, அஸ் கஹகுல வடக்கு, போபெத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் உடன் அமுலாகும் வகையில் நேற்று மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவ தள பதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, கொடக்கவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட் பட்ட இறக்குவானை நகரம், இறக்குவானை வடக்கு, இறக் குவானை தெற்கு, மஸ்சிம்புல மற்றும் கொட்டல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் நேற்று மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply