கிளிநொச்சியில் யானை உயிரிழந்தமை தொடர்பில் ஒருவர் கைது

கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் நேற்று யானை ஒன்று உயிரி ழந்த நிலையில் இருப்பதாகவும் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக் கலாம் எனவும் கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யானை கண்டுபிடிக்கப்பட்ட வயல் நிலத்தின் உரிமையாளரான சந்தேக நபரே தனது பயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்துள்ளார்.

நேற்றுக் காலை வயல் நிலத்தை பார்வையிடச் சென்ற பொது மக்கள் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராம சேவையாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிசாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கல்மடு பகுதியைச் சேர்ந்த ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். அவர் இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

உயிரிழந்த யானை 17 வயதுடையதும் 7அடி உயரமுள்ளதுமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply