வவுனியா வைத்தியசாலையில் மருத்துவர்கள் உட்பட 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிகக்ப்பட்டு கொ?ரோனா தொற்றென இனம் காணப்பட்ட நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில் அவருக்கு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சையளித்த 5 மருத்துவர்கள் உட்பட 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

தீவிர சிகிச்சைப் பிரிவின் 5 மருத்துவர்கள் உட்பட சுகாதார பணியாளர்கள் இன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றால் இறந்த பெண் வசித்து வந்த உலுக்குளம் ஜன உதான கிராமத்தில் வசித்து வரும் சுமார் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பி சி ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் சென்று வந்த இடங்களை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply