கொரோனா தொற்றாளர் தப்பி ஓட்டம்; 22 பேர் தனிமைப்படுத்தலில்

சபுகஸ்கந்த பகுதியில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் சந்தேக நபர் ஒருவர் தப்பி ஓடியதை அடுத்து குறித்த பகுதியில் வசிக்கும் 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.

தப்பிச்சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பிலிருநத ஆறு வீடுகளை சேர்ந்த 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப் பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட போது அல்லது சிகிச்சையளிக்கப்படும்போது தப்பியோடியவர்களுக்கு ஆதரவு வழங்கும் அனைவருக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கொ ரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட சபுகஸ்கந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தப்பி ஓடிய மையால் குறித்த பகுதிகளில் உள்ள 06 வீடுகளைச் சேர்ந்த 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply