வவுனியா சந்தையில் 140 பேருக்கு பி.சி.ஆர். சோதனை

வவுனியா மரக்கறிச் சந்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய 140 பேருக்கு இரண்டாம் கட்டமாக பி.சி.ஆர்.பரிசோதனைக்கான மாதிரிகள் நேற்று பெறப்பட்டன.

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில், பல்வேறு தரப்பினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் வவுனியா மொத்த விற்பனை சந்தையில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கடந்த வாரம் பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.எனினும் அவர்களில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் வவுனியா மரக்கறிச்சந்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய 140 பேருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் கட்டமாக, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பி.சி.ஆர்.பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

Be the first to comment

Leave a Reply