காரில் பயணித்த நபருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு! மனிதாபிமானம் இல்லாமல் இளைஞர்கள் செய்த செயல்

காரில் பயணித்த நபருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு! மனிதாபிமானம் இல்லாமல் இளைஞர்கள் செய்த செயல்

காரில் பயணித்த நபருக்கு
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு!
மனிதாபிமானம் இல்லாமல்
இளைஞர்கள் செய்த செயல்
******************************
படல்கும்புர – எல்ல பிரதேசத்தில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட பொறியியலாளர் ஒருவரிடம் இருந்து 81 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அவரது மனைவி மெதகம பிரதேசத்தில் வைத்தியராக பணியாற்றுகின்றார்.

இவர் புத்தல பிரதேசத்தில் இருந்து தனது வீட்டிற்கு வருகைத்தந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

வாகனத்தை அருகில் நிறுத்தி விட்டு பொறியியலாளர் உதவி கோரியுள்ள நிலையில் லொறி ஒன்றில் சென்ற மூவர் அவரிடம் பேச முயற்சித்துள்ளனர்.

அவரால் பேச முடியாமல் போன சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்ட நபரின் பையில் இருந்து 81 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் வேறு சிலர் பொறியியலாளரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவருக்கு கண்டி வைத்தியசாலை இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் கடுமையான நோய் பாதிப்பில் இருந்த போதிலும் பொறியியலாளர் சந்தேக நபர்களின் டிப்பர் வாகனத்தை புகைப்படம் எடுத்துள்ளார்.

அதற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 21, 23 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது

Be the first to comment

Leave a Reply