அரசாங்கத்தின் தீர்மானங்கள் எனது விருப்பத்திற்கு மாறாக அமையாது – அமைச்சர் தேவா நம்பிக்கை

அரசாங்கத்தின் தீர்மானங்கள் எனது விருப்பத்திற்கு மாறாக அமையாது – அமைச்சர் தேவா நம்பிக்கை!

தற்போதைய அரசாங்கத்தில் தன்னுடைய விருப்பத்தினை   புறக்கணித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வேலனை சமுர்த்தி வங்கி செயற்பாடுகளை கணனி மயமாக்கும் அங்குரார்ப்பண நிகழ்வில்  பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தெடர்ந்தும் உரையாற்றுகையில்,

தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் ஆதரவினால்  உருவாக்கப்பட்ட போதிலும் பாரபட்சமற்ற முறையிலேயே செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

எனினும், சில தமிழ் அரசியல்வாதிகளும்  சில ஊடகங்களும் தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டிய கடற்றொழில் அமைச்சர், தன்னால் கட்டி வளர்க்கப்பட்டுள்ள தேசிய நல்லிணக்கம் காரணமாக தனது விருப்பங்களுக்கு மாறாக அரசாங்கத்தின் தீர்மானங்கள் அமையாது எனவும் நம்பிக்கையை வெளியிட்டார்.

மேலும், கடந்த காலங்களில் மக்களின் தவறான தீர்மானங்கள் பல சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டமையை சுட்டிக்காட்டிய அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா, தற்போது கிடைத்த சந்தர்ப்பத்தினையாவது  சரியாக பயன்படுத்தி சரியான தரப்புகளுடன் இணைந்து எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(26.12.2020) நல்லூர், சிறுப்பிட்டி, புங்குடு தீவு மற்றும் வேலனை ஆகிய நான்கு சமர்த்தி வங்கிகளின் செயற்பாடுகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் கணனி மயமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply