நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் ரஜினிகாந்த் திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அப்பல்லோ நிர்வாகம்,

“கொரோனா குறித்து எந்த அறிகுறியும் ரஜினிகாந்திற்கு இல்லை. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் சோர்வு தவிற வேறு எந்த பிரச்சினையும் இல்லை. ரஜினிகாந்த் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ரத்த அழுத்தம் சீரான பின்னரே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது.

அதில் பணியாற்றிய 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

இந்த நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply