நேற்றைய தினம் களுத்துறை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது

கொவிட் -19 இரண்டாவது அலையின் போது களுத்துறை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக் கை 3084 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 592 பேரில் 245 பேர் கொ ழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.

கொழும்பு வெள்ளத்தைப் பகுதியில் 48 பேர் மற்றும் வெள் ளம் பிட்டிய பகுதியில் 42 பேர் நேற்றைய தினம் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் நேற்றைய தினம் 140 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் -19 இரண்டாவது அலையின் போது களுத்துறை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக் கை 3084 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 66 பேர் நேற்றைய தினம் அடை யாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 15 பேர் நீர் கொழும்பு சிறைச்சாலையைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் 17 பேர், மாத்தளை மாவட் டத்தில் 16 பேர், குருணாகல் மாவட்டத்தில் 14 பேர் மற்றும் காலி மாவட்டத்தில் 13 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேகாலை , கண்டி , மட்டக்களப்பு  ஆகிய மாவட்டங்களில் தலா 12 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பேர், மாத்தறை மாவட்டத் தில் 07 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 06 பேர், அம்பாறை மாவட்டத்தில் 04 பேர் , திருகோணமலை மாவட்டத்தில் 04 பேர் ஆகியோர் நேற்றைய தினம் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் தலா 03 பேர் என்ற அடிப்படையில் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

புத்தளம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங் களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒருவரும் உட்பட நேற் றைய தினம் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப் பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற் பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply