பிரித்தானியாவை அடுத்து முதன்முறையாக ஆசிய நாட்டில் பதிவானது புதிய கொரோனா வைரஸ்

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட பி -117 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் முதன்முறையாக ஆசிய நாட்டில் பதிவாகியுள்ளது.

அந்த வகையில் ஆசிய நாடான சிங்கப்பூரில் புதிய வைரஸ் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பாவிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டதாக சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் படித்து வரும் 17 வயது சிறுமிக்கே இவ்வாறு புதிய கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply