சுகாதார வழிமுறைகளுக்குப்பட்டு வழிபாடுகளை முன்னெடுக்க வேண்டும் – பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

சுகாதார வழிமுறைகளுக்குட்பட்டு வழிபாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் நேற்று நள்ளிரவு முதல் நத்தார் பண்டிகையைக் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

இந்தமுறை உலகெங்கிலும் வியாபித்துள்ள கொவிட் 19 தொற்று காரணமாக, குறைந்த மக்கள் தொகையுடன் ஆராதனைக் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, இலங்கையிலும், தனிமைப்படுத்தப்படாத இடங்களில் உள்ள தேவாலயங்களில் 50 பேருக்கு மேற் படாத பக்தர்களுடன் ஆராதனைகள் இடம்பெற்றன.

தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள தேவாலயங் களில் கட்டம் கட்டமாக தேவ ஆராதனைகள் நடைபெற்றிருந்தன.

புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் மக்கள் பங்கேற் புடன் நடைபெற்ற வழிபாடுகள் பேராயர் மல்கம் கர்தி னால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற தாக தெரியவந்தது.

இந்நிலையில் நாட்டின் நிலைமை கருதி சுகாதார வழிமுறைகளுக்குப்பட்டு வழிபாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply