நேற்றைய தினம் வீதி விபத்தில் ஐவர் பலி – அஜித்ரோகண

நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்ததுடன், 30 மேற்பட்டோர் காயமடைந்துள்ள தாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.

வீதியில் வாகனம் செலுத்தும் போது கவனமாகச் செலுத் துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நத்தார் தினத்தை முன்னிட்டு விசேடமாகக் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஏனைய தேவாலயங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாது காப் பைப் பலப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பொலிஸ் அதிகாரிகளுக்கு நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இன்றும் வீதிகளில் போக்குவரத்து சுற்று வளைப்பு மேற்கொள்ளப்படும்.

இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச் சாட்டுக்காகக் கடந்த 20 ஆம் திகதி முதல் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனத்தைச் செலுத்துதல் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்களை அடை யாளம் காண நாடு முழுவதும் 9,000 பொலிஸ் பணியாளர் கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் ஐவர் உயிரிழந்ததுடன், ஐவர் காயமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்தி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர்களின் சாரதி அனுமதி உரி மத்தை இரத்து செய்வதுடன் 25 ஆயிரம் ரூபா அபராதமும், சிறைத் தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply