கேகாலை மருத்துவரின் மருந்தினை பெறுவதற்காக இன்றும் அவரது வீட்டின்முன்னால் பெருமளவு மக்கள்

கேகாலை மருத்துவரின் கொரோனா மருந்தினை பெறுவதற்காக கொரோனா வைரஸ் விதிமுறைகளை புறக்கணித்து பெருமளவு மக்கள் அவரது வீட்டின் முன்னால் இன்றும் காத்திருக்கின்றனர்.

கேகாலை மருத்துவர் இன்று தனது மருந்தினை விற்பனை செய்கின்றார் அவரது மருந்தினை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

சில வாரங்களிற்கு முன்னர் கேகாலை வைத்தியரின் மருந்தினை பெறுவதற்காக மக்கள் பெருமளவில் திரண்டவேளை கேகாலை பிரதேச செயலக அதிகாரிகள் தலையிட்டு மருந்து விநியோகத்தினை தடுத்து நிறுத்தியிருந்தனர்.

ஆயுர்வேத திணைக்களத்தின் மருந்துகள் பிரிவு உணவு என்ற அடிப்படையில் மருந்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளதை தொடர்ந்தே மக்கள் அந்த மருந்தினை பெறுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply