இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானம்! பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள் இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த இடமாற்றங்கள் ஜனவரி 15 முதல் நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டு இருந்தது.

எனினும் தற்போது நிலவும் கொரோனா அசாதாரண நிலை காரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

மேலும் இந்த இடமாற்றங்களை மார்ச் 15 வரை ஒத்திவைக்க நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply