கொரோனா வைரசின் தோற்றம் குறித்த விசாரணை அவசியம் – கர்தினால் மல்கம் ரஞ்சித்

கொரோனா வைரஸ் மற்றும் வறுமை குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் தனது நத்தார் ஆராதனையின் போது கவனத்தை ஈர்த்துள்ளார்.
கந்தானை சென் செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் ஆராதனையின் போது அவர் கொரோனா வைரஸ் வறுமை குறித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.

கொரோன வைரஸ் எவ்வாறு உருவானது என்பதை கண்டுபிடித்து உறுதி செய்வதற்காக உரிய விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகலாவிய தொற்று தானாக உருவானது என மக்கள் கருதமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் சூழலை அளிப்பதும் மோசமான வறுமையும் கரிசனைக்குரிய விடயங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் வளம் என்பது சமூகத்தின் சிறிய குழுவினரின் கரங்களிலேயே காணப்படுகின்றது என தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் கொரோனா வைரஸ் வறியமக்களை மோசமாக பாதித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply