221 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடு களில் சிக்கியுள்ள 221 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, அவுஸ்திரேலியாவிலிருந்து 193 பேர் , ஜப்பானி லிருந்து 07 மற்றும் கட்டாரிலிருந்து 21 பேர் ஆகிய நாடு களிலிருந்து கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்ததாகத் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் மேலும் 415 பேர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 287 பேர், மாலத்தீ விலிருந்து ஒருவர், இந்தியாவிலிருந்து 27 பேர், மலேசி யாவிலிருந்து 12 பேர் , சீனாவிலிருந்து 77 பேர் மற்றும் சிங்கப்பூரிலிருந்து 11 பேர் வருகை தரவுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply