இலங்கையில் ஜனாஸா எரிப்புக்கு இம்ரான் கான் கடும் கவலை

இலங்கையில் ஜனாஸா எரிப்புக்கு இம்ரான் கான் கடும் கவலை தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிக்கப்படும் விவகாரத்தில் தனது கவனத்தை கூர்ந்தது இருப்பதாக அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது
நேற்று வியாழக்கிழமை 24 கொழும்பிலுள்ள ராஜதந்திரிகள் சிலர் இலங்கையில் இன அழிப்பு விவகாரத்தை ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டு பிரதமருக்கு அறிவித்துவிட்டதாக முஸ்லிம் சமூக சார்பு பிரதிநிதிகளிடமிருந்து தெரியவந்துள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக, பாகிஸ்தான் நாட்டின் எதிர்கட்சி பிரதிநிதிகளும், இலங்கையில் பலாத்கார ஜனாஸா எரிப்பு விவகாரத்தை, இம்ரான் கானின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். இதுபற்றி அவருடன் நேரடியாக பேச்சு நடத்தவும் அனுமதி கோரியிருந்தனர். அத்துடன் குறித்த ராஜதந்திரிகள் இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதற்கு எதிராக தமது ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டிருந்தார் இவற்றுக்கு மேலதிகமாக செனட்டர் ராஜா ஜபருல்லாஹ் இம்ரான் கானுடன் இலங்கையில் பலவந்தமாக எரிப்பு பற்றி இன்று டிசம்பர் 25 நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலாத்காரமாக எரிக்கப்படுவதால் அதனை தடுத்து நிறுத்த தேவையான அழுத்தங்களை இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்

Be the first to comment

Leave a Reply