இலங்கை பிரிட்டனிற்கு மனித விவகாரத்தில் முன்னுரிமைக்குரிய நாடு- பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்

இலங்கை மனித உரிமை விவகாரங்களில் பிரிட்டனிற்கு முன்னுரிமைக்குரிய நாடு என பிரிட்டனின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்திற்கான அமைச்சரான அஹமட் பிரபு இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த தனது கரிசனையை பிரிட்டன் தொடர்ச்சியாக இலங்கைஅரசாங்கத்துடன் வெளிப்படுத்தி வருகின்றது என அமைச்சர்தெரிவித்துள்ளார்.

சிவில் சமூகத்தினர் துன்புறுத்தப்படுவது சிவில் நிர்வாகம் இராணுவமயப்படுத்தப்படுவது,ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியுள்ளமை குறித்த கரிசனைகளை பிரிட்டன் வெளியிட்டுவருவதாக அமைச்சர்தெரிவித்துள்ளார்.
நான் பல தடவைகள் இலங்கையின் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் எனதுகரிசனைகளை தெரிவித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் நவம்பர் நான்காம் ஐந்தாம்திகதிகளிலும் தான் தொடர்புகொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply