இரத்தினபுரியில் முதல் கொவிட்-19 மரணம் நேற்று பதிவானது

கொவிட்-19 ஆல் ஏற்பட்ட முதல் மரணம் நேற்று இரத்தினபுரியில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர் இறப்பதற்கு முன் எம்பிலிப்பிட்டிய கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பலியானவர் (50 வயது) குடகல் வத்த பிரதேசத்தின் முச்சக்கரவண்டி ஓட்டுனர் என்பதுடன் பொம்பகெலேயில் வசித்து வந்துள்ளார்.

இரத்தினபுரி பொதுச்சுகாதார அதிகாரிகள் மாரடைப்பு காரணமாகவே இவர் இறந்ததாகக் கூறுகின்றனர்.

இதேவேளை குடுகல் வத்த பகுதியில் அநேக கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இப்பிரதேசத்தில் ஓர் உணவகத்தின் இரு ஊழியர்களே முதலில் பதிவான கொவிட்-19 தொற்றாளர்களாவர்.

பொதுச்சுகாதார பரிசோதகர்களின் அறிவுரைப்படி இப்பிரதேசக் கடைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply