காலியில் 5 நாட்களுக்கு பின்னர்குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு மத்தியில்ஜனாஸா இன்று தகனம்


காலியில் 5 நாட்களுக்கு பின்னர்
குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு மத்தியில்
ஜனாஸா இன்று தகனம்
**************************
காலி தெத்துடுகொடவில் கடந்த 19ஆம் திகதி கொரோனாவால் மரணித்தவரின் ஜனாஸா, காலி தடல்ல மயானத்தில், அரச செலவில் இன்று (24) தகனம் செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்​த 84 வயதான, மூன்று பிள்ளைகளின் தந்தையின் ஜனாஸாவே இவ்வாறு தகனம் செய்யப்பட்டுள்ளது.

எனினும், அந்த சடலத்தை (ஜனாஸா) தகனம் செய்வதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த உறவினர்கள், சடலத்தை பொறுப்பேற்பதற்கும் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், சடலத்தை வைத்திசாலையின் சவச்சாலையில் வைத்திருப்பதற்கும் வைத்தியசாலை ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply