
இலங்கையில் உள்ள சிறைகளில் 3500 இற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதன்படி சிறைத்துறை அதிகாரிகள் 116 பேர், விளக்கமறியல் சிறைகளில் 393 ஆண் கைதிகள், மற்றும் 09 பெண் கைதிகள் ஏனைய சிறைகளில் 2,870 ஆண் கைதிகள் மற்றும் 191 பெண் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நீர் கொழும்பு சிறைச்சாலையிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று 43 பேருக்கு தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறைச்சாலையின் மூன்றாவது பிரிவில் 86 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 42 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Be the first to comment