குழந்தை வியாபாரம் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் குழந்தைகள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் இதுவரை 43 குழந்தைகளை விற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பல இணையத்தளங்களை நடத்தி அவர் இந்த வியாபாரத்தை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எட்டு குழந்தைகள் தொடர்பான தகவல்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு குழந்தை தலா ரூ .250,000 க்கு விற்கப்பட்டுள்ளது.

நாற்பத்தேழு வயது சந்தேக நபர் மாத்தளையில் வசிப்பவர்.

சந்தேகநபர் உதவியற்றவர்கள் எனத் தெரிவிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களை அடையாளம் கண்டு, அவர்களை மொரட்டுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைத்து, அவர்கள் குழந்தைகளை பெற்றவுடன் விற்றுவிடுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை சந்தேகநபரை மொரட்டுவ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்திய நிலையில் ரூ .200,000 பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன் சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி 4 ம் திகதி மொரட்டுவ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply