பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு விதிக்கப்பட்டது கடூழிய சிறை

பத்து வருடங்களுக்கு முன்னர் 16 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மஜிஸ்ரேட் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

அத்துடன் குறித்த விரிவுரையாளர் அபராதமாக ரூபா 25 ஆயிரம் செலுத்த வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூபா 05 இலட்சம் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் அபராதம் செலுத்த தவறினால் மேலும் 06 மாதங்கள் சிறைத்தண்டனையும் இழப்பீடு வழங்கத் தவறினால் மேலும் 01 வருடம் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமெனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இழப்பீடு மற்றும் அபராதத்தை அவர் தனித்தனியாக செலுத்தவேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு மே 01 முதல் ஒக்டோபர் 31 வரை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply