
இலங்கையின் தேங்காய் எண்ணெய்யின் தரத்தை பேணும் வகையில் தேங்காய் எண்ணெய்யுடன் பாம் எண்ணெய் அல்லது வேறு எண்ணெய்களை கலப்படம் செய்து விற்பனை செய்தல் முற்றாக தடைசெய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
தெங்கு உற்பத்திக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்து உள்ளுர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களைப் பாதுகாத்தல் மற்றும் இலங்கை தேங்காய் எண்ணெய் குறியீட்டு நாமத்தைப் பாதுகாத்தல் போன்ற நோக்குடனேயே அமைச்சரவை இவ்வாறு தீர்மானித்துள்ளது.
அத்துடன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்வதற்குப் பதிலாக உள்ளுர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மூன்று மாதகாலம் துண்டுகளாக்கப்பட்ட உலர் தேங்காயை இறக்குமதி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
துண்டுகளாக்கப்பட்ட உலர் தேங்காய் இறக்குமதியை அரசுக்குச் சொந்தமான பீசீசீ நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
நாட்டில் பாம் எண்ணெய்ப் பாவனையைக் குறைத்து தேங்காய் எண்ணெய்ப் பாவனையை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்ளையென்பதை ஏற்றுக்கொண்டு நுகர்வோர் உரிமை மற்றும் சுகாதாரக் காரணிகளின் அடிப்படையில் தூய்மையாக்கப்பட்ட பாம் எண்ணெய்யை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கவும் அரவாங்கம் தீர்மானித்துள்ளது.
தெங்கு உற்பத்தியாளர்கள் பெற்றுக்கொண்டுள்ள கடன்தொகையை மீளச் செலுத்துவதற்காக சலுகைகள் வழங்கவும்,
தெங்குப் பயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதற்காக ஊடுபயிர்ச் செய்கை, பால் உற்பத்திக்கான கால்நடை வளர்ப்பு மற்றும் நீர் வழங்கல் போன்ற தெங்குப் பயிர்ச் செய்கையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கிலான சலுகைப் பொதிகளையும் அறிமுகம் செய்யவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Be the first to comment