பிரித்தானியாவால் இலங்கைக்கு பேராபத்து? வெளிவந்த புதிய தகவல்

பிரித்தானியாவில் பரவி வரும் கோவிட் வைரஸின் புதிய திரிபு இலங்கையிலும் பரவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு ஏற்படும் என்று தொற்றுநோயியல் தலைமை நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

புதிய வைரஸ் முந்தைய வைரஸை விட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.

பிரித்தானியாவில் இருந்து இலங்கையர்களின் வருகையுடன், வைரஸ் நாட்டிற்குள் நுழைந்தால் கோவிட்டின் இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.

எனவே, புதிய வைரஸ் நாட்டிற்குள் வராமல் தடுக்க அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாகவும் கூறினார்.

Be the first to comment

Leave a Reply