மேல் மாகாணத்தில் அன்டிஜென் சோதனைகள் இடம்பெறும் 11 இடங்களும் எவை?

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுபவர்களுக்கு எழுமாற்று அன்டிஜென் சோதனைகள் 11 இடங்களில் நடைபெறுகின்றன. அந்த 11 இடங்களும் எவையென பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கச் செயலாளர் எம்.பாலசூரிய இன்று அறிவித்துள்ளார்.

இதன்படி ஹன்வெல்ல பட்டர்பிளை பாலம், இங்கிரிய கட்டகடொல்ல பாலம், நிட்டம்புவவிலுள்ள ஹெலகொல்ல பாறை, கிரியுல்ல பாலம் அருகில், தொம்பே சமன பெட்ட பாலம், கொச்சிக்கடை தோட்டம் அருகில், படல்கம மாகந்துர பாலம், பெந்தார பாலம், கிண்ணியாவல சந்தி, அவித்தாவ பாலம் அருகே மற்றும் கலவான சமன் தேவாலயம் அருகில் ஆகிய இடங்களிலேயே அன்டிஜென் சோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இதற்கு மேலதிகமாக நாளை முதல் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலும் இச்சோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply