கொரோனா தொற்றிய வைத்தியரின் அசண்டை: இழுத்து மூடப்பட்ட வைத்தியசாலை

நாவலப்பிட்டி உலபனே நகரில் தனியார் வைத்திய நிலையம் ஒன்றை மூடுவதற்கு நாவலப்பிட்டி புதிய கருவாத்தோட்ட பொது சுகாதார பரிசோதர்கள் இன்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு குறித்த வைத்திய நிலையத்தின் வைத்தியருக்கு அறிவித்திருந்த போதும் அதனை பொறுட்படுத்தாது குறித்த வைத்திய நிலையத்தின் வைத்தியர் நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வைத்தியர் நாவலபிடிய பல்லேகம பிரதேசத்தில் இனங்காணப்பட்ட தொற்றாளருடன் தொடர்புடையவர் என்பதால் 14 நாட்கள் வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply