அரசியல் கைதியாக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு கொரோனா தொற்று

அரசியல் கைதியாக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு கொரோனா தொற்று..

கொழும்பு மகசின் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பத் தயாராகியிருந்த நிலையில் தமிழ் அரசியல் கைதியான யாழ்.பல்கலைக்கழக இசைத் துறை விரிவுரையாளர் நல்லை க.கண்ணதாஸ் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை அவருடைய வழக்கு விசாரணையை முன்னெடுக்கும் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கண்ணதாஸை வீடு அனுப்புவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர் கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் கொரோனா சிகிச்சை நடைமுறைகளுக்கமைய அவருக்கான தனிமைப்படுத்தல் காலம் நிறைவு பெற்றதும் அவர் வீடு திரும்புவார் எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் கண்ணதாஸனுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் மகசின் சிறைச்சாலையில் இடம்பெற்று வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply