அரசியல் கைதிகளின் உறவினர்களைத் தொடர்புகொள்ளுமாறு கஜேந்திரகுமார் அழைப்பு!

அரசியல் கைதிகளின் உறவினர்களைத் தொடர்புகொள்ளுமாறு கஜேந்திரகுமார் அழைப்பு!

மகசீன் சிறைச்சாலை தவிர்ந்த ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனோ அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுடனோ அல்லது நேரிலோ தொடர்புகொண்டு தமது உறவுகள் குறித்த விபரங்களை கையளிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னலம்பலம் தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டு தமிழ் கைதிகளில் 64 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கஜேந்திரகுமார், அவர்களில் 16 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் பரிசோதனைக்கு கூட உட்படுத்தப்படாமல் காய்ச்சல் உட்பட்ட நோய் அறிகுறிகளுடன் காணப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகள் குறித்த தகவல்கள் தம்மிடம் இல்லை என்பதால் ஏனைய சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் உறவுகள் தம்முடனோ, நேரிலோ அல்லது ஐசிஆர்சி (சர்தேச செஞ்சிலுவைச் சங்கத்தினர்) உடனோ தொடர்புகொண்டு விபரங்களை கையளிக்குமாறு கோரிக்கைவிடுத்தார்.

இதேவேளை தமது சட்ட ஆலோசகர் ஊடாக அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் தகவல் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தான், நேற்று ஐக்கிய நாடுகள் இலங்கை வதிவிடப்பிரதிநிதியிடம் இந்த விடயம் தொடர்பில் விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவித்தார்

Be the first to comment

Leave a Reply