
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக தென்னாபிரிக்காவின் ஜெக்ஸ் கலீஸ் (Jacques Kallis) நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக நடைபெறவுள்ள இந்த தொடர் காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட் ஆலோசகராக ஜெக்ஸ் கலீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் அரங்கில் தென்னாபிரிக்காவுக்காக 13,289 ஓட்டங்களை குவித்துள்ள ஜெக்ஸ் கலீஸ் 292 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டேர்பனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் ஜெக்ஸ் கலீஸ் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
அதற்கு பின்னரான காலப்பகுதியில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு குழாத்தில் இடம்பெற்றிருந்தார்.
கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிராக தென்னாபிரிக்கா விளையாடிய டெஸ்ட் தொடரிலும் ஜெக்ஸ் கலீஸ் தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக செயற்பட்டிருந்தார்.
Be the first to comment