புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவல்! விரைந்து சென்ற பொலிஸார்

வவுனியாவில் வயல் காணியில் இருந்து வெடிபொருள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஓமந்தை- அரசமுறிப்பு பகுதியிலுள்ள வயல் காணியில், மோட்டார் செல் ஒன்று இருப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா புலனாய்வு சேவைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த தகவலுக்கமைய, இன்று காலை சம்பவ இடத்திற்கு ஓமந்தை பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் சென்று சோதனையிட்ட நிலையில், மோட்டார் செல் ஒன்றினை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து நீதிமன்றின் அனுமதியுடன் மோட்டார் செல் செயலிழக்கச் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply