பண்டிகைக்கால சுற்றிவளைப்புகள் தொடரும் – அஜித் ரோஹன

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மேற் கொள்ளப்படும் பொலிஸ் போக்குவரத்து சுற்றி வளைப் புகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரையில் தொடரும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றிவளைப்புகள் நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்காக 9 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதன் படி,சுற்றிவளைப்புகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 113 இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப் பகுதியில் 60 விபத்துக்கள் பதிவாகியுள்ளது அத்துடன் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் , குறித்த விபத்துக்களில் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள தாகவும் பொலிஸ் ஊகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply