புதிய பரிணாமம் எடுத்துள்ள கொரோனா – கட்டுப்படுத்துமா தடுப்பூசி?

புதிய பரிமாணம் எடுத்துள்ள கொரோனா வைரஸை தற்போது கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசி கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது. வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாகவும் தெரிவித்துள்ள இங்கிலாந்து அரசு, இந்த வைரஸால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் புதியவகை வேகமாக பரவி வருவதால் இங்கிலாந்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளும் பிரிட்டனுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது பல்வேறு உலக நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் புதிய பரிமாணம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்றுவிட்டது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசியால் புதிய வைரஸை தடுக்க முடியுமா என்பதற்கு இன்னும் விடை கண்டறியப்படாததால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளே தற்போதைய புதிய கொரோனா வைரசையும் கட்டுப்படுத்தும் என விஞ்ஞானிகள் நம்புவதாக ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply