லெபனானிலிருந்து 271 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

லெபனானிலிருந்து 271இலங்கையர்கள் நேற்று நாடு திரும்பியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

லெபனானிலுள்ள இலங்கைத்தூதரகம் ஜனாதிபதி செயலகம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்றி 271 இலங்கையர்களை நேற்று நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.

மேலும்  லெபனானிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்கு இலங்கைத் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply