கொரோனா தொற்றாளர்கள் 21 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் – வைத்தியர் பாலித கருணாபேம

Coronavirus 2019-nCov novel coronavirus concept background. Realistic Vector illustration EPS10

கொரோனா வைரஸ் தொற்றால் அடையாளம் காணப் பட்ட 21 பேர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச் சை பெற்று வருவதாக பொதுச் சுகாதார பிரிவின் காரி யாலயம் தெரிவித்துள்ளது.

பி.சி.ஆர். பரிசோதனைகளைத் தவிர்த்து 21 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரி வித்துள்ளது.

அன்டிஜென் பரிசோதனை தொடர்ந்தும் சமூகத்தில் மேற்கொள்ளப்படுகின்றது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்தார்.

அத்துடன் பண்டிகை காலத்தைப் பொருட்படுத்தாமல், கொரோனா தொற்று நோய்க்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து சுகாதார ஊழியர்களும் இன்னும் கடுமையாக உழைத்து வருகிறார்கள் விசேட வைத்தியர் தெரிவித்தார்.

இந்நிலையில், நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப் பிறப்பை பொருட்படுத்தாமல், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளைக் கருத்திற்கொள்ளாது கொ ரோனா தொற்று நோயாளர்களின் கண்காணிப்பதில் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண ஊழியர்கள் வரை முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது இதனால் மேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு செல் வதைப் பொதுமக்கள் முடிந்தவரைத் தவிர்த்துக் கொள்ளு மாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலும் தெரி வித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply