இங்கிலாந்தில் பரவும் புதிய வகை வைரஸ்! அயல்நாடுகளுக்கும் தொற்றும் அபாயம்

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை வைரஸ்! அயல்நாடுகளுக்கும் தொற்றும் அபாயம்


இங்கிலாந்தில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதனால் பண்டிகை காலத்தை ஒட்டி அறிவிக்கப்பட்ட கொரோனா தளர்வுகளை மாற்றி, மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு நேற்று முதல் விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பரவும் புதிய கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தென்பட்ட நபர்களை இத்தாலி அரசும் கண்டறிந்துள்ளது.

புதிய வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபரும் அவரது நண்பரும் கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தில் இருந்து திரும்பியதாக இத்தாலியின் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனாவிற்கு இன்னும் விடிவுகாலம் பிறக்காத நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில் பல ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply