7 வயது சிறுமியை சீரழித்த 64 வயது முதியவர் – நீதிமன்றம் கொடுத்த தண்டனை

07 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 64 வயது முதியவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இரத்தினபுரி உயர் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த தண்டனையை வழங்கினார்.

அத்துடன் அபராதமாக ரூபா 40 ஆயிரம் விதிக்கப்பட்டதுடன் சிறுமிக்கு இழப்பீடாக ரூபா 03 இலட்சம் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் குருவிட்டவில் வசிக்கும் ஓவிட் அராச்சிகே என்பவராவார். 7 வயது சிறுமியை தனது தாயின் காவலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டமா அதிபர் இரத்தினபுரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவை தாக்கல் செய்திருந்தார்.

பிரதிவாதி தான் குற்றவாளி இல்லை எனத் தெரிவித்த நிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.எனினும் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பிரதிவாதி குற்றவாளி என்று நீதிபதி கண்டறிந்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிக்கும் நேரத்தில், நீதிபதி 7 வயது சிறுமியை சொக்லேட் கொடுத்து ஏமாற்றியதுடன், அவர் தந்தையாக இருக்க வேண்டிய வயதில் துஷ்பிரயோகம் செய்வது ஒரு கொடுமை என்றும் நாகரிக சமுகம் இதனை ஏற்றுக் கொள்ளாது எனவும் நீதவான் தெரிவித்தார்.

முதல் குற்றச்சாட்டில் பிரதிவாதிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபா 15,000 அபராதமும் 2 வது குற்றச்சாட்டில் கடின உழைப்புடன் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதம் ரூ .25,000 விதிக்கப்பட்டது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் அபராதம் செலுத்தவில்லை என்றால், அவர் தலா 1 ஆண்டு மற்றும் 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் நீதவான் தீர்ப்பளித்தார்.

Be the first to comment

Leave a Reply