ஸ்ரீலங்கன் விமான சேவையின் உணவு விநியோக பிரிவில் 31 பேருக்கு கொரோனா!

கட்டுநாயக்க விமான தளத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையில் உணவு விநியோக பிரிவில் 31 பணியாளர்கள் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய மருத்துவ அதிகாரி வைத்திய கலாநிதி மிக்ர ஹேப்பா உறுதிப்படுத்தியுள்ளார்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் உணவு விநியோக பிரிவின் 324 பேர் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின்போது எந்த 31 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின் உணவு விநியோக பிரிவில் பணியாற்றும் ஏனைய பணியாளர்கள் மத்தியிலும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏனைய பணியாளர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply