தயவுசெய்து எங்களுக்கு வாரத்தில் ஒரு நாளாவது ஓய்வு தாருங்கள் – பி.சி.ஆர் சோதனைகளில் ஈடுபடும் வைத்தியர்

முகக் கவசங்களை அணிந்து, உங்களைக் காத்துக்கொள்வதன் மூலம் எங்களுக்கு வாரத்தில் ஒரு நாளாவது ஓய்வு தாருங்கள் என பி.சி.ஆர் சோதனைகளில் ஈடுபடும் வைத்தியர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பி.சி.ஆர் பரிசோதனைக் கூடத்தில் பணியாற்றும் வைத்தியரான ஆ.முருகானந்தன் தனது விழிப்புணர்வுப் பதிவொன்றின் மூலம் பகிரங்கமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் தனது பதிவில் “யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் கொவிட் – 19 பி.சி.ஆர் பரிசோதனைக் கூடம், கடந்த ஒரு மாதத்தினுள் 2ஆயிரம் சோதனைகளைக் கடந்து விட்டது.

உங்கள் முகங்களுக்குக் கவசங்களை அணியுங்கள். ஆகக் குறைந்தது ஞாயிற்றுக்கிழமைகளிலாவது எங்களுக்கு ஓய்வு தாருங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வைத்தியரும் அவரது மனைவியும் பல்கலைக்கழக மருத்துவ பீட பி.சி.ஆர் ஆய்வு கூடத்தின் ஆரம்ப காலம் முதல் வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிப் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply